குழந்தைகளின் திரை நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி

சமூக வலைத்தளம் மற்றும் Digital சாதனங்கள் அதிகமாக பயன்படுத்தும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளின் Screen நேரத்தை (Screen Time) குறைப்பது மற்றும் பெற்றோர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம். குழந்தைகளின் திரை நேர கட்டுப்பாடு

இந்த வலைதள பதிவில், குழந்தைகளின் Screen நேரத்தை குறைக்க சில நுணுக்கங்கள் , பெற்றோர்களின் தவறுகள் மற்றும் அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் காணலாம்.

குழந்தைகளின் Screen நேரத்தை குறைக்க 5 வழிமுறைகள்:

1. நேரத்தை கட்டுப்படுத்துதல்:

நாம் நம் குழந்தைகளை படித்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அரங்கங்களுக்கு அழைத்து செல்வதன் மூலம் குழந்தைகளின் Screen நேரத்தை குறைக்கலாம். இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதன் மூலம் இதை அவர்களால் செய்ய முடியவில்லை, ஆகவே அவர்கள் குழந்தைகளிடம் நேரத்தை செலவிட முடியவில்லை.

நாம் கண்டிப்பாக தினமும் ஒரு மணி நேரம் அவர்கள் அருகில் அமர்ந்து அன்று நடந்த நிகழ்வுகளை கேட்டு அறிவதன் மூலம் அவர்களின் நினைவு கூர்மையாக இருக்கும். ஒரு நல்ல Time Table குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2. மாற்று செயல்பாடுகள் அறிமுகப்படுத்துதல்:

உங்கள் குழந்தைகளின் ஆர்வத்தை தூண்ட நீங்கள் அவர்களுக்கு புத்தகங்கள், Educational Toys, கைவினைகள், கலை மற்றும் இசை கருவிகளை அறிமுகப்படுத்துங்கள். இது உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் சிந்திக்கும் திறன்களை அதிகரிக்க செய்யும்.

3. விளையாட்டு நேரத்தை ஊக்குவிக்குதல்:

உங்கள் குழந்தைகளை வெளியில் விளையாடும் வாய்ப்புகளை உருவாக்குங்கள். புல்வெளிகள், பூங்காக்கள், மற்றும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விளையாடல், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நடத்தை மற்றும் நண்பர்களுடன் நெருங்கிய உறவுகளை உருவாக்க உதவும்.

4. குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்:

ஒரு குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணங்கள் மேற்கொள்வது மற்றும், அந்த குழந்தைக்கு கதை சொல்வதன் மூலம் அவர்கள் நன்றாக அனைவரோடும் பேசி பழக எளிதாக இருக்கும். இது குடும்ப உறவுகளை பலமாக்கும் மற்றும் திரை நேரத்தை குறைப்பதற்கு உதவும்.

5. நேரத்தைக் கண்காணிக்கும் செயலிகள்:

உங்கள் குழந்தைகளின் சாதனங்களில் திரை நேரத்தை கண்காணிக்கும் செயலிகளை பயன்படுத்துங்கள். இந்த செயலிகள், கட்டுப்படுத்தப்பட்ட நேரத்தை நிலைநிறுத்த உதவும் எனவே உங்கள் குழந்தைகள் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு தவிர்க்கப்படும்.

குழந்தைகளின் திரை நேர கட்டுப்பாடு

குழந்தைகளின் திரை நேர கட்டுப்பாடுபெற்றோர் தவறுகள் மற்றும் அவற்றை எப்படி தவிர்ப்பது

1. தவறான மாதிரியைக் காண்பித்தல்:

தவறு: பெற்றோர்கள் தாமாகவே திரை நேரத்தை அதிகம் செலவிடும்போது, குழந்தைகளும் அதை பின்பற்றுவர்.

தவிர்க்க: பெற்றோர்களாக நாம் திரை நேரத்தை குறைக்கும் முயற்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

2. முறையற்ற தனித்தாள்:

தவறு: குழந்தைகளை தனியாக திரைவிழிப்பில் இருப்பதற்கு விடுவதால், அவர்கள் மோசமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள்.

தவிர்க்க: குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு, அவர்களுடன் விளையாடி, அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.

3. பத்திரிகை படிக்க நேரமில்லாமை:

தவறு: குழந்தைகளை அச்சிடப்பட்ட பத்திரிகைகள் (Cartoon Books) ஆர்வம் செலுத்தாமல் வைப்பது.

தவிர்க்க: குழந்தைகளை புத்தகங்களைப் படிக்க முதலில் நீங்கள் புத்தகங்களை படிக்க பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் உங்களை பார்த்து அவர்களும் புத்தகம், மாத இதழ்கள் மற்றும் தலைப்புகள் படிக்க ஆர்வம் காட்டுவார்கள். அப்போது அவர்களின் அறிவு திறன் கூர்மையாகும்.

4. உகந்த சுற்றுப்புற வசதிகள் இல்லாமை:

தவறு: இந்த காலகட்டத்தில் வாடகை வீடு மற்றும் நகர்ப்புற வீடுகளில் உள்ள குழந்தைகள் வெளியில் சென்று விளையாட போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் அதிக நேரம் திரையில் செலவுசெய்கிறார்கள்.

தவிர்க்க: வீட்டில் விளையாட்டு கூடைகள், புத்தகங்கள், கலைத்துணிகள், மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி வீட்டிலே விளையாடும் சூழ்நிலையை உருவாக்குங்கள். இது உங்கள் குழந்தைகளின் உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும்.

5. குறைவான செயல்பாடுகள்:

தவறு: நம் குழந்தைகள் அதிக நேரம் screen முன்னாள் அமர்வதன் மூலம் அவர்களின் செயல்பாடுகள் முடங்கிவிடுகின்றன. இது அவர்களின் திறமையை குறைக்கிறது.

தவிர்க்க: கலர் Pencil, ஓவிய புத்தகம் (Drawing Books), க்ளேயர் (Clay Pots) மற்றும் மினி ஆர்க் செய்முறைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.

6. நேரத்தை முன்னிலைப்படுத்தவில்லை:

தவறு: பெற்றோர் செய்யும் தவறு அவர்கள் குழந்தைகளின் Screen Time உடனடியாக குறைக்க வற்புறுத்த கூடாது.

தவிர்க்க: மெல்லிய மாற்றங்களை முன்னிலைப்படுத்தி, ஒரு திட்டமிடல் வழிமுறையை அமைத்து, அதை தொடர்ந்து பின்பற்றுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் நம் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு மாற்றம் செய்யலாம்.

7. பொருத்தம் இல்லாத சாதனங்களை வழங்குதல்:

தவறு: குழந்தைகள் பயன்படுத்தும் சாதனங்களில் வலுவான கட்டுப்பாடுகள் இல்லாமை மற்றும் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்களை வழங்காமல் இருத்தல்.

தவிர்க்க: சாதனங்களில் உள்ள தீமைகளை குழந்தைகளிடம் எடுத்து சொல்வதன் மூலம் அவர்கள் அதனை விட்டு விலகுவதற்கான முயற்சி செய்வார்கள். அப்போது நாம் அவர்களின் அறிவு திறனை மேம்படுத்த உதவும் விளையாட்டு சாதனங்களை வாங்கி தருவதன் மூலம் நாம் அவர்களின் screen time குறைக்க முடியும்.

இந்தவாறு, நாம் குழந்தைகளின் திரை நேரத்தை குறைக்க முயற்சி செய்து, அவர்களின் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நேரங்களை முன்னிலைப்படுத்தலாம். இதுவே ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் எளிமையான குடும்ப உறவுகளை உருவாக்க உதவும்.

என்னுடைய வழிகாட்டுதல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாய் நம்புகிறேன். மகிழ்ச்சியான பெற்றோராக வாழுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top