பெண்களின் சுயதொழில் மற்றும் முன்னேற்றம் என்பது நம் சமுதாயத்தின் முக்கியமான அம்சமாகும். இன்றைய பெண்கள் பல துறைகளில் முன்னேறி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த பதிவில், பெண்களின் சுயதொழில் மற்றும் முன்னேற்றம் பற்றிய முக்கிய அம்சங்களை ஆராய்வோம்.
உலகில் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தனித்துவம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.சமீபகாலங்களில் வேளைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
பெரும்பாலும் பெண்கள் தங்களது சுயமரியாதைக்காகவும் மற்றும் குடும்ப முன்னேற்றத்திற்காகவும் வேலைக்கோ அல்லது சுயதொழில் மூலமாகவோ தனது குடும்ப வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.
பெண்கள் தங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி தாங்களே முதலாளியாக வேண்டும் என்ற எண்ணம் பெண்களிடையே அதிகரித்து வருகின்றது.
சில பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணங்களால் வெளியில் சென்று வேலை செய்ய முடியாத சூழல் ஏற்படுகின்றது. அப்படி பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய சில எளிமையான சுயதொழில் ஆலோசனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.
பெண்களின் சுயதொழில் :
பெண்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி சுயதொழில் தொடங்குவது மிகவும் முக்கியமானது. இது அவர்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.
சுயதொழில் மூலம் பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்திற்கும் உதவ முடியும். பல பிரச்சனைகள் மற்றும் தடைகளை உடைத்து பெண்கள் தொழில் துவங்குகின்றனர்.
சுயதொழிலின் முக்கியத்துவம்
- பொருளாதார சுதந்திரம்: சுயதொழில் மூலம் பெண்கள் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும்.
- திறமைகளை வெளிப்படுத்துதல்: பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
- சமூக முன்னேற்றம்: பெண்கள் சுயதொழில் மூலம் சமூகத்தில் முன்னேறி, மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்.
பெண்களின் முன்னேற்றம் :
பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். கல்வி, தொழில், அரசியல், விளையாட்டு போன்ற துறைகளில் பெண்கள் முன்னேறி, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்
கால்நடை வளர்ப்பு:
ஆடு, மாடு மற்றும் கோழி வீட்டிலே வளர்த்து வருவது ஒரு மிகச் சிறந்த சுயதொழில் ஆகும். இவற்றை வளர்ப்பதன் மூலம் கால்நடை இருந்து வரும் கழிவுகளை வயலுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம். கோழிகளை இறைச்சிக்காகவும் பயன்படுத்தலாம்.
தோட்டம்:
நிலம் மற்றும் தேவைக்கேற்ப நிலத்தடி நீர்வசதி உள்ளவர்கள் அவர்களது தோட்டத்தில் முருங்கை, வாழை, கீரை மற்றும் காய்கறிகளை பயிரிடலாம். இது நமது குடும்பத் தேவையும் சிறந்த சில்லறை வியாபாரமும் ஆகும்.
மூலிகை செடிகள்:
மூலிகை செடிகளை வளர்த்து அவற்றை பதப்படுத்தி விற்பனை பொருளாக மாற்றலாம். நமது கிராமப்புறங்களில் சாதாரணமாக கிடைக்கும் துளசி, குப்பைமேனி, முடக்கத்தான் கீரை போன்ற இயற்கை மருத்துவம் நிறைந்த தாவரங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைய வரவேற்பு பெறலாம்.
எண்ணெய் தயாரித்தல்:
நல்லெண்ணை, கடலைஎண்ணெய், தேங்காய்எண்ணெய் ஆகியவற்றை விதைகளாக விற்பனை செய்யாமல் எண்ணை எடுத்து சந்தைப்படுத்தினால் நல்ல இலாபம் கிடைக்கும். இயற்கை விளைபொருட்களை சந்தைப்படுத்த Social Media பயன்படுத்தி எளிமையாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெறச்செய்யலாம்.
தூள் பொருட்கள்:
வளர்ந்து வரும் நாகரீக உலகத்தில் வீட்டில் உள்ள இருவருமே வேளைக்கு செல்வதால் அனைத்துமே ரெடிமேடு உணவுகளாக மாறிவிட்டன.
கேழ்வரகு, கம்பு, நவதானிய உணவுப் பொருட்கள், மஞ்சள், மிளகாய், மல்லி போன்றவற்றை பொடி செய்து தூளாக விற்பனை செய்யலாம்.
உங்களது கைப்பக்குவம் நன்றாக இருக்கும் பட்சத்தில் நீங்களே இட்லி பொடி, சாம்பார் பொடி ஆகியவற்றை அரைத்து விற்பனை செய்யலாம்.
Home Bakery:
வீட்டில் இருந்தபடியே பெண்கள் அதிக வருமானத்தை பெற பேக்கரி தொடங்கி கேக், சாக்லேட், பிஸ்கட் மற்றும் இதர தின்பண்டங்களை தயாரித்து விற்பனை செய்யலாம். பண்டிகை காலங்களில் நல்ல வருமானத்தை பெறலாம்.
மக்கள் வீட்டில் தயாரிக்கும் சத்தான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட விரும்புவார்கள். சத்தான நவதானிய தின்பண்டங்களை தயாரித்து அதை விற்பனை செய்ய Instagram, Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதன் மூலம் உங்களது விற்பனையை பெருக்கலாம்.
கைவினைப் பொருட்கள்:
கைவினைப் பொருட்களான மண்பாண்டம், அலங்காரப் பொருட்கள் மற்றும் இதர கைவினைப் பொருட்கள் செய்து விற்பனை செய்யலாம். இது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம்.
தையல்:
வீட்டில் ஒரு தையல் இயந்திரம் மட்டும் வாங்கி கொண்டால் போதும், நமது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தைக்க தொடங்கினால் போதும். ஒரு blouse தைப்பதன் மூலம் 200 ரூபாய் கிடைக்கும், இதில் பல designs வைத்து தைத்தல் இன்னும் அதிக லாபம் கிடைக்கும். மேலும் ஆறி ஒர்க்ஸ் blouse தைத்தால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம்.

மெழுகுவர்த்திகள்:
மெழுகுவர்த்தி மற்றும் அலங்கார விளக்குகளை வீட்டிலே மிகவும் எளிமையாக தயாரிக்கலாம்.
ஆர்கானிக் சோப்பு:
நம் மக்களிடையே ஆர்கானிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எனவே ஆர்கானிக் சார்ந்த பொருட்களை பயன் படுத்தி வீட்டிலே சோப்பு செய்து விற்பனை செய்யலாம்.
அழகு கலை: (Home Beauty Parlor):
இந்த modern உலகத்தில் ஒரு சாதாரண பெண் கூட தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு நீங்கள் நன்கு பயிற்சி பெற்ற பிறகு வீட்டில் ஒரு சிறிது இடம் இருந்தாலே இதை செய்ய முடியும். மேலும் திருமணத்திற்கு நேரில் சென்று பணி செய்தால் இன்னும் நிறைய லாபம் பெறலாம்.
இட்லி மாவு தயாரித்தல்:
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் மிக வேகமாக ஓடுகிறார்கள். வேலைப் பளு, நேரம் இன்மை ஆகிய காரணங்களால் அவர்களால் சமைத்து சாப்பிடுவது மிகவும் கடினமாக ஆகிவிட்டது. ஆகவே அவர்கள் fast food போன்ற உணவுகளை தேடி செல்கின்றனர்.
நீங்கள் வீட்டிலே இட்லி மாவு, தோசை மாவு தயாரித்து தருவதன் மூலம் அவர்களை ஈர்க்கலாம். மற்றும் இதன் மூலம் நிறைய சம்பாதிக்கலாம்.
Coaching Class (Online Class):
எந்த விஷயம் உங்களுக்கு நன்றாக தெரியுமோ அவற்றை நீங்கள் online மூலம் கற்பிக்கலாம் – தையல், ஆறி ஒர்க்ஸ், குக்கிங், dancing, Yoga, படிப்பு சம்பந்தமான விசயங்கள் Programming, AI, etc. பிள்ளைகள் நன்றாக படிப்பதற்காக பெற்றோர்கள் பிள்ளைகளை டியூஷன் அனுப்புகிறார்கள். நீங்கள் கோச்சிங் சென்டர் வைத்து நடத்தலாம்.

YouTube Channel:
இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்கள் மிகவும் அதிகம். எனவே நீங்க உங்களுக்கு தெரிந்த ஒரு தலைப்பை எடுத்து அதனை YouTube சேனல்களில் வீடியோக்களாக பதிவு செய்து அதனை YouTube வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம்.
ஆனால் இதற்கு நீங்க ஒரு நல்ல தலைப்பை எடுத்து தினமும் வீடியோ போடுவதன் மூலம் பயனர்கள் இதை பார்த்து பயன் பெரும் பட்சத்தில் உங்களால் சம்பாதிக்க முடியும்.
பிளாக்கிங் மற்றும் அப்ளியேட் மார்க்கெட்டிங்
இன்றைய டிஜிட்டல் உலகில், பிளாக்கிங் மற்றும் அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பது மிகவும் பிரபலமாகியுள்ளது.
பிளாக்கிங்
பிளாக்கிங் என்பது ஒரு வலைப்பதிவிற்கான உள்ளடக்கத்தை உருவாக்கி பராமரிக்கும் செயல். பிளாக்கிங் மூலம், உங்கள் சிந்தனைகளை, அனுபவங்களை மற்றும் அறிவுகளை பகிர்ந்து கொள்ளலாம். பிளாக்கிங் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன:
- விளம்பரங்கள்: உங்கள் பிளாக்கில் விளம்பரங்களை இடுவதன் மூலம், நீங்கள் வருமானம் பெறலாம்.
- பிரதிபலிப்பு: உங்கள் பிளாக்கில் உள்ள பதிவுகளை மற்ற தளங்களில் பகிர்ந்து, அதிக பார்வையாளர்களை பெறலாம்.
- பதிவுகள்: உங்கள் பிளாக்கில் பதிவுகளை இடுவதன் மூலம், உங்கள் பிளாக்கின் தரத்தை மேம்படுத்தலாம்.
அப்ளியேட் மார்க்கெட்டிங்(Affiliate Marketing)
Affiliate Marketing என்பது மற்றவர்களின் பொருட்களை அல்லது சேவைகளை விளம்பரப்படுத்தி, விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கு கமிஷன் பெறும் முறை. இது ஆன்லைனில் பணம் சம்பாதிக்க மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்று. அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கு சில முக்கிய அம்சங்கள்:

- அப்ளியேட் ப்ரோகிராம்கள்(Affiliate Program): முதலில் ஏதாவது ஒரு அப்ளியேட் ப்ரோகிராமில் Sign up செய்து கொள்ளவேண்டும். affiliate மார்க்கெட்டிங் பற்றி தெரிந்து கொள்ள இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள் . இந்த வலைத்தளம் மூலம் நீங்களும் affiliate மார்க்கெட்டிங் செய்து சம்பாரிக்கலாம்.
- பொருளை தேர்வு(Choose the Product): பிறகு ஏதேனும் ஒரு பொருளை தேர்வு செய்து அதனை விளம்பரம் செய்ய வேண்டும்.
- விளம்பரப்படுத்தல்(Advertisement) : அந்த பொருளின் லிங்கினை சமூக வலைதளங்கள், பிளாக், யுடியூப் வீடியோஸ், பேஸ்புக் அல்லது வேறு எந்த வழிகளின் மூலமாகவும் ஷேர் செய்து விளம்பரப்படுத்த வேண்டும்.
- கமிஷன்(Commission): அந்த link -னை பயன்படுத்தி யாராவது பொருளை வாங்கினால் அதற்கான பங்கு (கமிஷன்) உங்களுக்கு கிடைக்கும்.