குழந்தைக்கு சரியான முறையில் உணவளிப்பது என்பது அக்கறை மட்டுமின்றி அம்மாக்களின் இன்றியமையா கடமையாகும். நன்கு சீரான உணவை உட்கொள்ள வேண்டும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாங்கள் சாப்பிடும் உணவு குழந்தையை பாதிக்கும் என்பதால் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் முழுமையாக கவனம் இருத்தல் வேண்டும் – தாய்ப்பால் சுரப்பு

தாய்மாருக்கான இயற்கை முறையில் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சில யோசனைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள்
ஒரு பெண் அவள் பிரசவத்திற்கு பிறகு உடல் மற்றும் மனதளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு. இயற்கையான முறையில் தாய்ப்பாலினை அதிகரிக்க சில யோசனைகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க வழிமுறைகள்:
- தாய்மார்கள் குடிநீர் குடிப்பது அவசியம்: தாயின் உடலில் நீர்சத்து இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதிக அளவு நீர் குடிப்பது தாய்மார்கள் தாகமடைந்து Dehydrate ஆகாமல் தடுக்க உதவும்.
- தாராளமாக உண்ணும் உணவு: குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தினம் தோறும் கூடுதலாக அதிக கலோரி மற்றும் புரதம் நிறைந்த சத்தான உணவுப்பொருட்கள் உணவில் நிறைந்திருக்க வேண்டும்.
- காய்கறிகள்
- முட்டை
- மீன் (பால்சுறா மீன்)
- இறைச்சி உணவுகள்
- பழங்கள்
- கீரை வகைகளை அதிக அளவில் சேர்த்து கொள்ளவேண்டும் (பாலக்கீரை, வெந்தியக்கீரை, கடுகுக்கீரை)
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்:
காய்கறிகள்: நீர்சத்துகள் அதிகமா உள்ள காய்கறி – சுரைக்காய், முள்ளங்கி, பீர்க்கங்காய் மற்றும் நீர்சத்து அதிகமா உள்ள அனைத்துவகையான காய்கறிகளும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.
பயறு வகைகள்: பால் உற்பத்தியை அதிகரிக்க பயறு வகைகள், குறிப்பாக முளைகட்டிய பயறுவகைகள். இது குழந்தை மற்றும் தாய்க்கு தேவையான சரிவிகித சத்துகளை கொடுக்கின்றன. குறிப்பாக வெந்தயக்கஞ்சி பால் சுரப்பை அதிக அளவில் அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் கருப்பையின் அழுகிய சதை நீங்க உதவுகின்றன.
பூண்டு: தாய்மார்களின் பால்சுரப்பை அதிகரிக்க எளிமையான வழி பூண்டு. தாய்மார்கள் பூண்டு போதுமானளவு எடுத்துக்கொள்வதன் மூலம் இரத்தநாளங்களில் தளர்வு ஏற்பட்டு இதயத்திற்கு சீரான இரத்தஓட்டத்தை உறுதி செய்கிறது.
இரண்டு அல்லது மூன்று பூண்டுப்பல்லை பாலுடன் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தினம் இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வருவதன் மூலம் தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.
மீன்: பால்சுறா மீன் மற்றும் பால்சுறா கருவாடு இவை இரண்டும் தாய்ப்பாலை சுரப்பதில் உதவுகின்றன.
கிழங்கு வகைகள்: மரவள்ளி கிழங்கு (குச்சிக்கிழங்கு), இதை நீரில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
ஓட்ஸ்: அதிக அளவு நார்சத்து உள்ள மிக சிறந்த ஒரு உணவுப்பொருள் ஓட்ஸ். சர்க்கரை வியாதி உள்ள தாய்மார்களுக்கு சர்க்கரை அளவை குறைக்க இந்த ஓட்ஸ் மிக சிறந்த உணவுப்பொருள் ஆகும்.
பப்பாளிப்பழம்: பப்பாளிப்பழத்தில் antioxidants உள்ளது. இது தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோனை அதிகரிக்க உதவும். இந்த பழம் சிறு துண்டுகளாக வெட்டி உண்டு வரவும்.
பெருஞ்சீரகம்: இதை சூடு தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை வடிகட்டி பருகுவதன் மூலம் தாய்ப்பால் அதிகரிக்கும்.
முட்டை: ஓமேகா-3 கொழுப்புகள், கால்சியம், வைட்டமின் A, B12 உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை முட்டை கொண்டு உள்ளது.

தாய்ப்பாலினை சுரப்பை அதிகரிக்க உடல் நல ஆலோசனைகள்:தாய்ப்பால் சுரப்பு
- மார்பு பாலூட்டல்: குழந்தை முழுவதும் பாலை உறிஞ்சுவதற்கு தடையின்றி மார்பு பாலூட்டல் செய்ய வேண்டும். மார்பு பாலூட்டல் அதிகமாக இருந்தால், பால் உற்பத்தியும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- உணவுப் பழக்கவழக்கங்களை மாற்று: உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி புதிய சத்துள்ள உணவுகளைச் சேர்த்து பார்க்கலாம்.
தாய்களின் மன உற்சாகம் மிக முக்கியம். மன உற்சாகம் அதிகமாக இருந்தால் உடலின் பாலை உற்பத்தியும் அதிகமாகும். மன உற்சாகம் மற்றும் நேரத்தைச் சந்தோஷமாகக் கழிப்பது மிகவும் முக்கியம்.
புதிய தாய்மார்கள் பாலை உற்பத்தியை அதிகரிக்க சிறப்பான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் குழந்தையின் சுகாதாரமும் உடல் வளர்ச்சியும் அதிகமாகும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆலோசனைகளுக்கு மேலாக தாய்மார்கள் மார்பின் காம்புகளையும் மார்பகங்களை கசக்கி விடுவதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து பால்சுரக்கும் திறனும் அதிகரிக்கும்.
எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன்பு மார்பகங்களை கசக்கி விடுவது மிகவும் முக்கியம். உங்கள் சுகாதாரமும் முக்கியம் என்பதால், மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.