கோடைக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

கோடையில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி ? நமது பிள்ளைகளை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க சில முக்கியக் குறிப்புகள் மற்றும் வழிகளை இங்கே காணலாம்.

ஆறு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்திருப்போம் எனவே அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் உடலுக்கு குளிர்ச்சியளிக்க கூடிய உணவாகவும், நீர்ச்சத்து அதிகமுள்ள உணவாகவும் இருக்க வேண்டும். கோடையில் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

குழந்தைகள் வெளியில் செல்வதால் “sunburn,” “rashes” போன்றவை ஏற்படும், குழந்தைகளுக்கு விரைவில் நீர்ச்சத்தை இழக்கும் அபாயமும் ஏற்படவாய்ப்பு உள்ளது.

வெயில்காலங்களில் குழந்தைகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் உடலில் தடிப்பு, வியர்க்குரு, Typhoid போன்றவை ஏற்படும். இவ்வாறு ஏற்படும் பிரச்சனையை சரிசெய்வது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கோடை பருவத்தில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி:

கோடையில் அதிகம் வியர்ப்பதால் நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளியில் சென்று விளையாடிவிட்டு வரும்போது சாப்பிடும்முன் கைகழுவும் பழக்கத்தை பின்பற்றவும்.

தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லவும்

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு
  • குளிர்பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக பழச்சாறுகளை சாப்பிடக்கொடுக்கவும்.
  • வீட்டின் சூழலை குளுமையாக வைத்திருக்க வேண்டும்.
  • புழுக்கம் அதிகமான நேரங்களில் குழந்தைகளை உட்புறங்களில் வைத்திருக்கவும்.
  • நன்கு காற்றோட்டம் உள்ள இடங்களில் தங்க வைத்திடவும்.
நல்ல தூக்கம்:
  • மிதமான அறையில் தூங்கிட முக்கியம்.
  • தூங்குவதற்கு முன்பு பாதங்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது.
ஆடை (Dress):

இந்த கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு பருத்தி ஆடை அணிவது மிகவும் அவசியம். இது குழந்தைகளின் சருமத்திற்கு எதுவாகவும் மற்றும் வியர்வை எளிதில் உறிஞ்சக்கூடிய அடையாக இருக்கும். கோடைகாலத்தில் தினமும் இரண்டு முறை உடைகளை மாற்ற வேண்டும். ஆடைகளால் கூட குழந்தையின் உடலில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

குளியல் (Bathing):

உங்கள் குழந்தைகளை தினமும் இரண்டுமுறை குளிக்கவைப்பது மிகவும் நல்லது. சீரான இடைவெளியில் தலைகுளிக்க வைக்கவும்.

குழந்தையின் உணவில் செய்யவேண்டிய மாற்றங்கள்:
  • காரமான உணவுகளை தவிர்த்து பழங்களை கொடுக்கவும்.
  • பால் கொடுப்பதற்கு பதிலாக தயிர், மில்க் ஷேக்குகளை கொடுக்கவும்.
  • கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை பருகவும்.
குளிர்ச்சிதரும் உணவுகள்:
நுங்கு (Palmyra Tender Nut / Tender Palm):

நுங்கு கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். குழந்தைகளின் வயதிற்கு ஏற்றவாறு நுங்கின் அளவை சேர்த்துக்கொள்ளுவது மிகவும் அவசியம்.

சைனஸ் அலர்ஜி உள்ள குழந்தைகளுக்கு நுங்கு தரும் முன் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

தர்பூசணி (Watermelon):

அதிக நீர்சத்து உள்ள பழங்களில் மிகவும் முக்கியமான பழம் தர்பூசணி. குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியன பழங்களில் தர்பூசணியும் ஒன்று. கோடை காலத்தில் மிக எளிதில் கிடைக்கக்கூடிய பழமான தர்பூசணியில் ” வைட்டமின் A , B காம்ப்ளெஸ், ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்த ஒன்று.

குடும்ப ஒவ்வாமை இருந்தால் 9 மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். அப்படி இல்லாத குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பிறகு சாப்பிட பழக்கப்படுத்தலாம்.

இளநீர் (Coconut Water):

கோடையின் நண்பன் என்று அழைக்கப்படும் ஒன்று தான் இந்த குளிர்ச்சிதரும் இளநீர். இளநீரில் உள்ள தாதுப்பொருட்கள் நீர், கார்போஹைட்ரேட் (Carbohydrates), புரதம், எலெக்ட்ரோலைட், பொட்டாசியம் ஆகியவை கொண்டுள்ளது. இதில் உள்ள லாரிக் அமிலம் தாய்ப்பாலை போன்றது. ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இளநீர் கொடுக்குமுன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

முலாம்பழம் (Muskmelon):

வெயிலுக்கு இதமான பழங்களில் மூலம் பலம் ஒன்று. இதில் வைட்டமின் A, C, K, B, பொட்டாசியம், மேக்னிசியம், லைகோபீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உடல் உஷ்ணத்தை போக்கும் தன்மை கொண்டது. மூலம் பழம் குறைந்த கலோரி உள்ள நார்சத்து மிகுந்த பழம்.

வாழைப்பழம் (Banana):

உடலில் உள்ள திசுக்கள் தண்ணீரை உறிஞ்சி உடலை குளிர்விக்க உதவும். இவை பொட்டாசியம் நிறைந்த பழம். உடலில் நீர்இழப்பை தடுக்கின்றன.

வெள்ளரிக்காய் (Cucumber):

கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் நீர்சத்து நிறைந்த பழம். இது குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தயிர் (Curd):

இதில் கால்சியம் நிறைந்து உள்ளது எனவே இது செரிமானத்தை அதிகரித்து உடலை குளுர்ச்சியாக வைக்க உதவுகிறது.

கோடை காலத்தில் பிள்ளைகளின் மேல் நாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்:
  • சோர்வாகுதல்:
    • அதிக வெப்பத்தின் காரணமாக குழந்தைகள் அதிக சோர்வாகத் தோன்றலாம். இது அவர்களின் செயல்பாடுகளை பாதிக்கலாம்.
  • சூரியநோய்:
    • அதிக நேரம் நேரடி சூரிய ஒளியில் இருக்கும்போது, சூரிய நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
கோடை காலத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதார முறைகள்:
  • குழந்தைகளுக்கு வெப்பம் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கவும்.
  • உங்கள் குழந்தை உணவில் அனைத்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளித்தால் வேண்டும்.
  • கோடை காலத்தில் அதிகப்படியான உணவுகளைத் தவிர்க்கவும்.
  • உடல் நிலையை நன்கு பரிசோதிக்கவும்.

கோடை பருவத்தில் குழந்தைகளை பாதுகாப்பது கடினமல்ல, ஆனால் நம் கவனத்திற்கு சில சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வதே முக்கியம்.

இதன்மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும். குளிர்ந்த பானங்களை அதிகமாக குடிக்க விடாமல், இயற்கை பானங்களை அதிகம் சாப்பிட சொல்லவும். சோர்வாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

பொதுவாக உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஒரு நன்மைகரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். இந்த பரிந்துரைகள் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளை கோடை பருவத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

நீங்கள் இவற்றைப் பின்பற்றி உங்கள் குழந்தைகளின் சுகாதாரத்தை காப்பாற்றலாம் என்பதில் நிச்சயமாக நம்பிக்கை அளிக்கிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top